கால்வாயில் இருந்து ஆணின் சடலம் ஒன்றைப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
ஹொரணை, வாகவத்தையில் ‘மட அல’ எனப்படும் கால்வாயில் ஹொரணைப் பொலிஸார் இன்று காலை குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் இறந்தவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் வாகவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய திருமணமாகாதவர் ஆவார்.
இவர் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று அவரது உறவினர்கள் ஹொரணைப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் ஹொரணைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.