http://www.geevanathy.com/2023/03/1846-pdf.html
திருகோணமலை சிவன் கோயில் தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்களை பதிவு செய்திருக்கும் இந்த ஓலைச்சுவடி கோயிலின் 1846 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரிய அசையும், அசைவற்ற சொத்துக்களின் விபரங்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.
திருக்கோணாத மலையில் சைவ சமய பிரபல்யமாக விளங்கும் விசுவநாத சுவாமி கோயில் வளமைப் பத்ததியினை முறையாகப் பதிவு செய்ய வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும். அதிலும் குறிப்பாக சிவன் கோயில் ஆலய பரிபாலன சபை, ஆலய அடியவர்கள் விரைவாக ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டிய முக்கிய பணியாகும்.