செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியா குடும்பம் கொலையா? தற்கொலையா? – தொடரும் மர்மம்

வவுனியா குடும்பம் கொலையா? தற்கொலையா? – தொடரும் மர்மம்

1 minutes read

வவுனியாவில் மர்மமான முறையில் மரணமடைந்தவர்களின் உடலங்களுக்கான சட்ட வைத்திய பரிசோதனை நேற்று (08) இடம்பெற்றது.

பரிசோதனையின் முடிவில் உடலில் நஞ்சருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை. மரணித்தவர்களின் இரத்தம், சிறுநீர் மாதிரிகளும் மேலதிக பரிசோதனைக்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன் மாதிரிகளுக்கான பரிசோதனை முடிவு வந்ததன் பின்னரே மரணத்துக்கான காரணம் என்னவெனத் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியும் என்று சட்ட வைத்திய பரிசோதனை அறிக்கையுள்ளது.

வவுனியா, குட்செட்வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் (07) மீட்கப்பட்டிருந்தது. .

இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42) வீட்டின் விறாந்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இரண்டு பிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது 09), கௌ.கேசரா (வயது 03) ஆகியோர் உறங்கியபடியும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியாப் பொலிஸார் மீட்கப்பட்ட சடலங்களை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் வவுனியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More