0
மக்களின் உரிமைகளை மீறும் வகையில் தேர்தல் பிற்போடப்பட்டால், அதற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கலாநிதி விஜித நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.
கண்டியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தேர்தல் என்பது மக்களுக்கு இருக்கின்ற ஜனாநாயக உரிமையாகும்.
அதனை எந்த வகையில் இல்லாது செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது” – என்றார்.