0
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்குக் கொடுப்பதற்காகக் கஞ்சாவை எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த மேற்படி பெண், கணவருக்கான உடைகளுக்குள் கஞ்சாவை மறைத்து எடுத்துச் சென்றார் எனவும், சோதனையின் போது அது மீட்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.