பண்டாரவளை, பூனாகலை – கபரகலைப் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவால் நான்கு லயன் குடியிருப்புகள் பகுதியிளவில் சேதமடைந்துள்ளன. 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் – 03 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் சிக்கிக் காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மண் மேடு சரிந்து விழுந்ததில் 40 வரையான லயன் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
காயமடைந்த எழுவரில் இருவர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், இருவர் தியதலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனர்த்தத்தில் எதுவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை.