கார் ஒன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சாவடைந்துள்ளார்.
ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் இவர், பாடசாலைக்குச் செல்லத் தயாராகி, தனது காரை வீட்டிலிருந்து வெளியே எடுத்த வேளையே விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளைப் பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மூன்று வருடங்களுக்கு முன் இதே பகுதியில் இதே போன்று காலை வேளையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.