நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இந்தத் திட்டம் உதவும்.
இந்த மாதத் தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்துக்கு அமைவாக இலங்கைக்கு பரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட அதன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது.
சர்வதேச நாணய நிதியத்துக்குச் செயற்குழுவைக் கூட்டி இலங்கையின் கடனுக்கான கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்தது.
முன்னெப்போதும் இல்லாத சவால்களில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தேவையான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் இந்தத் திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது.