வாகன விபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பசறை – மொனராகலை பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் தந்தையும், மகனும் மோட்டார் சைக்களில் பயணித்த வேளை சிறிய பட்டா ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய தந்தை பலத்த காயங்களுடன் பசறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இறந்த நபரின் சடலம் பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளைப் பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.