பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
‘பயங்கரவாதத்துக்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம், ஆங்கிலத்தில் எண்டி – டெரரிசம் (anti -terrorism) எனக் குறிப்பிட்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்தச் சட்டமூலத்தை தயாரிப்பதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.