பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்-கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 35-வதுஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குடும்ப வாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவு கூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.
அவுஸ்திரேலியாவின் எம்மவருடன் கூடவே வாழ்ந்தவாறு, தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்து, தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் அதி உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட மாமனிதர் தில்லை ஜெயக்குமார், மாமனிதர் பேராசிரியர் எலியேசர் மற்றும் நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன், மாமனிதர் பொன்.சத்தியநாதன், தமிழ்த்தேசியப்பற்றாளர் சண்முகம் சபேசன், தமிழ்த் தேசியப்பற்றாளர் சிங்கராசா ஆகியோர்களையும் இந்நாளில் நினைவுகூருவது இந் நிகழ்வின் சிறப்பான விடயமாகும்.
மேலும் ஆண்டு தோறும் பள்ளிமாணவர்களுக்கிடையில் நடாத்தப்படும் அன்னை பூபதி நினைவுதின பொதுஅறிவுப்போட்டி இவ்வாண்டும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. பொது அறிவுப்போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் குழுவாகவோ தனிநபர்களாகவோ இணைந்துகொள்ள இருப்பின் 10 / 04 / 2023 இற்கு முன்னர் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பது நாட்கள் தியாகவேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த்தேசியச் செயற்-பாட்டாளர்கள், பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இடம்: St John’s Catholic Church, 52 Yarra St, Heidelberg VIC 3084.
காலம்: 16-04-2023. ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை.
மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0406 429 107.
நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (விக்ரோறியா)
Naatupatralar naal 2023_General Knowledge Competion Announcement_Melbourne_2023