மட்டக்களப்பு, காத்தான்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த சைக்கிள் ஒன்று நாவற்குடா பகுதியில் வான் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநரான சிறுவன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.