இரத்தினபுரியில் மற்றுமொரு பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி – பட்டுகெதர பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வைத்து 70 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் அந்த வீட்டில் தங்கியிருந்த நிலையில், இன்று அதிகாலை ஒரு குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.
அதன்பின்னர் அக்குழுவினர், குறித்த பெண்ணைக் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்து விட்டு மூத்த சகோதரியைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.