இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ச தலைமையினலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது கோபத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் மே மாதம் அரசுக்கு எதிராகத் தீவிரம் அடைந்த போராட்டத்தின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.
அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா, வன்முறையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.