7
திருகோணமலை, நிலாவெளி – சாம்பல்தீவு பகுதியிலுள்ள குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருகோணமலை, கோணேசபுரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
சக நண்பர்களுடன் குளத்திற்கு நீராடச் சென்று பின்னர் தாமரைப்பூ பறிக்கச் சென்ற போது அவர் நீரில் மூழ்கினார்.
சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.