“வரும் தடைகளைத் தகர்த்தெறிந்து அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையாக அமுல்படுத்தியே தீருவார்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசியல் ரீதியில் தனக்குப் பின்னடைவு ஏற்படும் என்ற போதிலும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார்.
அதிகாரப் பகிர்வு விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பவர்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இதனால் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலைப்பாடுகளும் மாறி வருகின்றன.
தமிழ், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபட வேண்டும். இது அத்தியாவசிய காரணி என ஜனாதிபதி கருதுகின்றார்.” – என்றார்.