வாகன விபத்தில் வயோதிபதித் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அநுராதபுரத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வீதியில் எதிரெதிர் திசைகளில் பயணித்த ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவனும் மனைவியும் சாவடைந்துள்ளனர்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்களான 67 வயதுடைய கணவனும், 64 வயதுடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஹயஸ் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த வயோதிபதித் தம்பதியினரின் சடலங்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.