செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்த சஜித்!

அரசுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்த சஜித்!

0 minutes read

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வாபஸ் பெறுவதாக இருந்தால் அதை எழுத்துபூர்வமாக அரசு அறிவிக்க வேண்டும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பொதுமக்களின் எதிர்ப்பைக் கருத்தில்கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டாலும், குறித்த அந்த முடிவில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதற்கு முன்னரும் மக்களால் எதிர்க்கப்பட்ட சட்டமூலங்களை அரசு வாபஸ் பெற்றாலும், பின்னர் தமது பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றிக்கொண்டது.

எனவே, அரசு இந்தப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வாபஸ் பெறுவதாக இருந்தால், அது தொடர்பில் தெளிவான எழுத்துமூல அறிவிப்பை வெளியிட வேண்டும்.

இதனால் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மனித உரிமைகள் கூட மீறப்படுகின்றன.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More