செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘செஞ்சொற் செல்வரின் சமூகப் பணி | சொரூபன்

‘செஞ்சொற் செல்வரின் சமூகப் பணி | சொரூபன்

2 minutes read

சைவத் தமிழ் பண்பாட்டின் பாதுகாவலர்களாக தோன்றிய பல பெரியார்களின் வரிசையில் இவரின் பணி மிகவும் மகத்துவமானது…

ஆறுமுகம் – சரஸ்வதி தம்பதியினரினருக்குப் புதல்வனாக 1961 மே மாதம் 28ஆம் திகதி வைகாசி விசாகத்தன்று பிறந்தவர் திருமுருகன்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்று, உயர் கல்வியை பேராதனை பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு பட்டதாரியானார்.

மஹரகம தேசியகல்வி நிறுவகத்தில் பட்டப்படிப்பின் படிப்பை மேற்கொண்டார். 1989ஆம் ஆண்டில் சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.

பின்னர் 1993ஆம் ஆண்டில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று, பகுதித் தலைவராகவும், உப அதிபராகவும், பின்னர் பிரதி அதிபராகவும் பணியாற்றி 2008 மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் அதே கல்லூரியின் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார்.

சமூகப்பணிகளை முன்னெடுத்து செல்வதை இலகுவாக்கும் நோக்குடன் அவர் தனது 50வது வயதில் அரச பதவிகளை ஓய்வுறுத்தி தனது சமய, சமூப்பணிகளை முழுநேரமாக ஆற்றிவருகிறார்.

இவரது ஆசிரிய சேவையைப் பாராட்டும் வகையில் 1991ஆம் ஆண்டு யாழ். மாவட்டக் கல்வித் திணைக்களமும், 2002ஆம் ஆண்டு வலிகாமம் கல்வி வலயமும் நல்லாசிரியர் விருதை வழங்கிக் கௌரவித்தது.

இந்த சமூகத்தின் மீது இவர் கொண்ட அதீத விருப்பு மற்றும் பற்று காரணமாக இவரின் பணிகள் இன்று உலகம் போற்றும் ஒன்றாக உள்ளது

தனது 32 வயதில் துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆன்மீகத்தாய் சிவத்தமிழ் செல்வி அம்மையார் அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்று சிவத்தமிழ் செல்வி அம்மையார் பிறந்த நாள் அறநிதியசபை உறுப்பினராக 1993ம் அண்டு சேர்ந்து கொண்டார்.

32 வருடங்களுக்கு மேலாக தேவஸ்தான தலைவராக உன்னத பணியாற்றிய சிவத்தமிழ் செல்வி அம்மையாரின் இழப்புக்குப்பின் ஆறு.திருமுருகன் அவர்கள் தேவஸ்தான தலைவராக 29.06.2008 இல் நடைபெற்ற நிர்வாகசபைக் கூட்டத்தில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 30வது ஆண்டு விழாவில் சைவத்திற்கும், தமிழிற்கும், சமூகத்திற்கும் துர்க்காதேவி தேவஸ்தானம் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் இவருக்கு நாவலர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

சிவத்தமிழ்ச் செல்வி அம்மையாரின் நினைவாக பன்னிரு திருமுறைகளுக்கு மதிப்புக் கொடுத்து அந்நூல்களை ஒவ்வொன்றாக பதிப்பித்து வெளியீடு செய்தார்.

சிவபூமி அறக் கட்களை ஊடாக அற்றி வரும் பணிகள் எளிதில் சொல்லில் அடங்காதவை.

மன வளர்ச்சி குறைந்த பிள்ளைகளை ஆற்றுப்படுத்தவென 02.07.2004 இல் 12 பிள்ளைகளுடன் ஐயாவால் வைத்திய கலாநிதி குகதாசன் தம்பதிகளின் உறவினர்களான லீலாவதி சுப்பிரமணியம் குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கிய காணியில் கோண்டாவிலில் ஆரம்பிக்கப்பட்ட சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை இன்று 150 பிள்ளைகளை வழிப்படுத்துகிறது.

இந்து சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஆறுமுகநாவலரின் சிலையினை தன் சொந்தச் செலவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபித்தமை தற்கால சமூகம் ஆறுமுகநாவலரின் பணிகள் மற்றும் சிந்தனை பற்றி அறிய வேண்டும் என்ற உயர் எண்ணத்திலாகும்.

2011.10.06 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இவரது சைவப்பணி,தமிழ்ப்பணி, சமூகப்பணிகளை கௌரவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவை, பேரவை வழங்கிய சிபார்சின் பேரில் கௌரவ கலாநிதிப் பட்டம் 2011.10.006 பல்கலைக்கழக வேந்தரால் வழங்கப்பட்டது.

இவரது பெயருடன் நிரந்தரமாகவே சேர்ந்தமைந்த வகையில் ‘செஞ்சொற் செல்வர்” என்ற பட்டம் திகழ்கிறது. இணுவில் – கோண்டாவில்காரைக்கால் சிவன் தேவஸ்தானத்தின் 1992ஆம் ஆண்டு மகோற்சவ காலத்தின் போது ‘சைவ சமய மகிமைகள் பேருண்மைகள்” எனும் பொருள் பற்றிபன்னிரு கோணங்களில் தொடர் விரிவுரை நிகழ்த்தியதற்காக மேற்படி தேவஸ்தானத்தால் 1992 ஆகஸ்ட் 13ஆம் திகதியன்று ‘செஞ்சொற் செல்வர்” பட்டம் வழங்கப்பட்டது.

இன்றைய சைவத் தமிழ் மக்களின் நல்ல நம்பிக்கையாக இருக்கும் இவருக்கு தெல்லிப்பளை துர்க்காதேவியின் அருள் என்றும் கிடைக்க பிரார்த்திப்போமாக…

சொரூபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More