“ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைத்துக் கூட்டணி அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இந்த நகர்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாதகமாகப் பதிலளித்த போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அந்த முயற்சியைக் கைவிட்டுள்ளதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையப்போவதாக வெளியான தகவலின் மத்தியிலேயே இந்தக் கூட்டணி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சஜித்துக்குப் பிரதமர் பதவியையும் வழங்க ரணில் ஒப்புக்கொண்டிருந்தார் எனவும், அந்தச் சலுகையையும் சஜித் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.