ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் கிழவன்குளம் பகுதியில் வசித்து வந்த மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் (வயது 47) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இரவு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த வியாழக்கிழமை பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார். இதையடுத்து கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.