அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டுபொடயிலிருந்து மூனமல்தெனிய நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர், பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் சிறிய ரக லொறியில் மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.