கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாக கோடீஸ்வரன் றுஷாங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களுக்கான பணியாள் நியமனம் தொடர்பாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி வழங்கியிருக்கும் உத்தரவின் பிரகாரம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் என்ற வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா அவர்களின் பிரத்தியேக உதவியாளராக கோடீஸ்வரன் றுஷாங்கன் அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை அமைச்சர் சார்பில் ஒருங்கிணைக்கும் இணைப்பாளராகவும் அவர் செயற்படுவார்.
2020 ஆம் ஆண்டு முதல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராக செயற்பட்டு வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக இணைப்பாளராக கோடீஸ்வரன் றுஷாங்கன் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.