செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

1 minutes read
மரபுரிமைச் சின்னங்களை அழிந்து போகவிடாமல் அவற்றைப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியினருக்கு அவ் மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் 2021 ஆம் ஆண்டு வைகாசி மாதம் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் (JAFFNA HERITAGE CENTER)  புதிய நிர்வாகத் தெரிவு அண்மையில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவராக வரலாற்று துறை பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் இவ் மையத்தின் ஏனையவர்களாக உப தலைவர்கள்  – விஸ்வலிங்கம் மணிவண்ணன், சிவகாந்தன் தனுஜன் தெரிவு செய்யப்பட்டனர். செயலாளராக  ராஜேந்திரம் ரமேஸ், துணைச் செயலாளர்  – விஸ்வபாலசிங்கம் மணிமாறன், பொருளாளராக நடராஜா சுகிதராஜ்பதிப்பாசிரியராக்வரதராஜன் பார்த்திபன், இணைப்பாளராக பேராசிரியர்  செல்வரட்ணம்  சந்திரசேகரம் மற்றும் மையத்தின் உறுப்பினர்களாக வைத்திய கலாநிதி  பேராசிரியார் சு .ரவிராஜ்,  பாலசுப்பிரமணியம் கபிலன், புவனசுந்தரம் ஆரூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல் இவ் மையத்தினால் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றமையும் அது ஓரிரு வாரங்களுக்குள் திறந்து வைக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More