இன்று அனைத்து பொதுமக்களுக்கும் பேரிடரை தோற்றுவிக்க தயாராகும் பயங்கரவாத தடைச் சட்டமூலம் இப்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பட உள்ள நிலையில் இதை பற்றி அறிவு ஒவ்வொரு பொது மக்களும் இருப்பது நன்றே
பயம்காரவாத சட்டமூல ஆரம்ப சட்ட ஏற்பாடுகள் 1947 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது ஆகும். இது பயங்கரவாத தடுப்பு சட்டம் போன்று அல்ல தேசிய அனர்த்தம் அல்லது பாரிய விபத்து போன்ற சூழ்நிலைகளை கையாள்வதற்காக நிறைவேற்றுனர்களுக்கு தற்காலிகமாக மேலதிக அதிகாரங்களை வழங்கும் சட்ட கட்டமைப்பாகும் .
இந்த ஆரம்ப சட்ட ஏற்பாடு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லை எனினும் அடையாளப்படுத்தப்படும் அரசாங்கத்துக்கு எதிரான பயங்கரவாத செயற்படுகளை புரிபவரை இது கண்கானிக்கவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கைது செய்வதற்கு உறுதுணையாக இருந்தது.
அதன் பின் 1971 இல் ,பொது மக்கள் பாதுகாப்பு கட்டமைச் சட்டத்தின் கீழ் அவசர நிலையைப் பிரகடன செய்வதன் மூலம் கிளர்ச்சிகளை ஒடுக்க பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கியது.
1978 ஆம் ஆண்டு ,வடக்கு மாகாணத்தில் கிளர்ச்சி அதிகரித்த பொழுது பாராளுமன்றம் 1948 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தடைச்சட்டத்தை நிறைவேற்றி, தமிழீழ விடுதகைப் புலிகள் மற்றும் அதையொத்த பிற அமைப்புகளை தடை செய்தது இலங்கையின் வரலாற்றின் முதலாவது பயங்கரவாத தடுப்புச் சட்டம் இது என்று கூறலாம் .தொடர்ந்து 1979 இல் தற்காலிக ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து 1982 சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு இன்று வரை அமுலில் உள்ளது.
-தொடரும் –