தந்தை செல்வாவின் 46 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தினர்.
தொடர்ந்து, கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.நவரட்ணம் நினைவுப் பேருரையாற்றினார்.