1
முல்லைத்தீவு, மல்லாவி – வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குளத்தில் இன்று நீராடச் சென்ற சந்தர்ப்பத்தில் சகோதரர்கள் இருவர் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 மற்றும் 16 வயதான சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.