இலங்கையின் அபிவிருத்திக்கு உள்நாட்டுத் தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் முன்வந்துள்ளார்கள். அவர்களை நாம் வரவேற்கின்றோம். இந்தச் சிலர் என்ற எண்ணிக்கை பலராக – நூற்றுக்கணக்காக – ஆயிரக்கணக்காக – பல்லாயிரக்கணக்காக மாற வேண்டும் என்பதே எமது விருப்பம்.
உள்நாட்டில் வாழும் தமிழர்களும் நாட்டின் அபிவிருத்திக்குக் கூடுதலான பங்களிப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் வீழ்ந்த எமது நாட்டை விரைவில் மீளக்கட்டியெழுப்ப முடியும்.
நாட்டின் அபிவிருத்திக்குத் தமிழர்கள் பங்களிப்பு வழங்குவது போல் அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் பிரச்சினைக்கும் விரைந்து தீர்வு வழங்குவது அரசின் கடமை.” – என்றார்.