சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தான் கலந்துகொள்ளமாட்டார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய காரணத்தால் கொழும்பிலிருந்து வௌியேற வேண்டிய நிலை ஏற்பட்டமையே இதற்கான காரணம் என்றும் அறிக்கை மூலம் அவர் அறிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்வது தவறான விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாக வாக்களிக்கவுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.