தாமும் தமது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்த அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் கடற்படைத் தளபதி வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை குறித்து தமக்குச் சில சந்தேகங்கள் உள்ளதுடன், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருப்பதாகத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர், திடீரென அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை எடுத்தமை தமக்கு ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஆகியோர் இருப்பதாகத் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பிற விசாரணைகள் தமக்கு எதிராகத் தடையை விதிக்கக் காரணங்கள் என்றும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பரிந்துரைப்பது முறையற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.