“மொட்டுக் கட்சியின் 126 எம்.பிக்கள் ரணில் பக்கம் நிற்கின்றனர். எனவே, அவர்தான் மொட்டுக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்துள்ள அறிவிப்பில் உண்மையில்லை” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இழுத்தடிப்பு, அவருடன் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகளால் சுமார் 80 வீதமான மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, விஜயதாஸ ராஜபக்ச, டிரான் அலஸ் ஆகியோர் சுயாதீனமாகச் செயற்பட ஆர்வம் காட்டினாலும் சில அமைச்சர்களின் அழுத்தங்கள், தலையீட்டால் அவர்களும் அதிருப்தி நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.