ஆனையிறவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ். வடமராட்சியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி, சாரையடியைச் சேர்ந்த 27 வயதான சுந்தரமூர்த்தி சத்ஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.