பிரான்ஸில் கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான அஞ்சுவை நாடு கடத்துவதை தடுக்க சட்டக் குழுவின் உதவியை அவரது காதலி எனக் கூறப்படும் பிரான்ஸ் நாட்டு யுவதி நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குடு அஞ்சு எதிர்வரும் 4ஆம் திகதி பிரான்ஸ் நீதிமன்றில் முற்படுத்தப்படும்போது அவர் சார்பாக இந்த சட்டத்தரணி குழு ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டு யுவதி ஒருவருடன் சில காலமாக தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் குடு அஞ்சு, இலங்கையை சேர்ந்த திருமணமான தனது மனைவியை விவாகரத்துக் கோரியுள்ளமை தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.