செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முருகானந்தா கல்லூரியில் மூன்று கருத்தரங்குகள்

முருகானந்தா கல்லூரியில் மூன்று கருத்தரங்குகள்

11 minutes read

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் அமைந்துள்ள முருகானந்தா கல்லூரியில் இன்றைய தினம் மூன்று கருத்தரங்குகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாகவும் கருத்தரங்கு

கிளிநொச்சி மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ‘எழுகை’ அமைப்பின் ‘அகவொளி’ கல்விக்கான செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி வடக்கு வலயத்தை சேர்ந்த உயர் தர மாணவர்களுக்கான பெளதிகவியல் செயன்முறை கருத்தரங்கம் இன்று இரண்டாவது நாளாகவும் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இதன் போது கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் திரு சிவனருள்ராஜா அவர்கள் வருகை தந்தார். உடன் பிரதிக் கல்வி பணிப்பாளர் திரு அருந்தவச்செல்வமும் வருகை தந்தார்.

ஊடக பாட கருத்தரங்கு

SJC87 INTIATIVE ஏற்பாட்டில் லண்டன் அபியகம் அனுசரணையில் கிளிநொச்சி வடக்கு கல்வி திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான ஊடக கற்கைகள் மற்றும் தொடர்பாடல் பாட கருத்தரங்கில் வளவாளராக வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய ஆசிரியர் அனுராஜ் கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கு மதிய உணவு 

இன்று கிளிநொச்சி கல்லூரியில் இடம்பெற்ற ஆங்கில பாட கருத்தரங்கு. இலங்கை செஞ்சிலுவை சங்கம் வாரத்தில் குறிபிட்ட நாட்களில் முன்னெடுக்கும் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் திருமதி இராசேந்திரம் சூரியகுமார் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு சிவனருள்ராஜா கலந்துகொண்டார். அத்துடன் குறித்த கருத்தமர்வுக்கான சிற்றுண்டி அனுசரனையை லண்டன் அபியகம் அமைப்பு வழங்கியுள்ளது.
பதிவு மற்றும் புகைப்படங்கள் – ஊடக கழகம், கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More