முன்னறிவிப்பின்றி வெளிநாடு சென்ற 50 வைத்தியர்களைக் கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இன்மையால் சத்திர சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆறு வைத்தியர்கள் கடமையாற்றியிருந்த போதிலும் நேற்று இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றியிருந்தமையால் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
மறு அறிவிப்பு வரும் வரை மருத்துவமனையில் அவசர அறுவைச் சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.