“மொட்டுக் கட்சி என்பது ஒரு கட்சியல்ல. அது குடும்பம். குடும்பமாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சி. இனி அதை யாராலும் கட்டியெழுப்ப முடியாது.”
– இவ்வாறு கூறியுள்ளார் மொட்டுக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“மொட்டுக் கட்சிக்கு இனி யார் தலைவராக வந்தாலும் அந்தக் கட்சியை இனிக் கட்டி எழுப்ப முடியாது. அது கட்சியல்ல; ஒரு குடும்பம். ராஜபக்சவின் குடும்பம்.
அந்தக் குடும்பத்தின் இருப்புக்காக அடுத்த அரசியல்வாதிகளை அழித்து – பொருளாதாரத்தை நாசமாக்கி – மக்களின் எதிர்பார்ப்புக்களை முடிவுக்குக் கொண்டு வந்து குடும்பமாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சி இது.
யாருக்குத் தலைவர் பதவி கொடுத்தாலும் ,யாருக்கு அமைச்சுப் பதவிகள் கொடுத்தாலும் இந்தக் கட்சியை இனிக் கட்டியெழுப்ப முடியாது என்பதை ஜனாதிபதி உள்ளிட்ட மொட்டுக் கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.