வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வவுனியா, நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் பயணித்த போது நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி, அருகில் இருந்த பாலத்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த தனுஜன் (வயது 20) என்ற இளைஞரே சம்பவ இடத்தில் சாவடைந்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.