மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மாத்தறையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்னால் துரத்திச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 52 வயதுடைய கமல் சமிந்த என்பவரே சாவடைந்தார். அவரது சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவருடன் வந்த மகன் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து ஓடிய போது அவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.