குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பதவிய, புல்மோட்டை – ஆறாம் கட்டை – மஹசென்புர பகுதியில் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 38 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.