0
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று காலை சுப நேரத்தில் தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், திருகோணமலை மாவட்ட அரச அதிபர் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.