யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை – கம்பர்மலை ஆலயக் கேணியில் குளித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த ஜெகன் ஜெனோசாந் (வயது – 22) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
ஆலயத் திருவிழாவுக்காக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர்கள் வல்வெட்டித்துறையில் வந்து தங்கி நின்றுள்ளனர்.
ஆலய தீர்த்தத் திருவிழா முடிவடைந்த பின்னர் மூன்று இளைஞர்கள் கேணியில் குளித்துள்ளனர். இதன்போதே மேற்படி இளைஞர் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை வல்வெட்டித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா மேற்கொண்டார்.