சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை வந்துள்ள பயணிகள் சொகுசுக் கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த இந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்குச் சென்று பின்னர், காங்கேசன் துறைமுகம் சென்று திரும்பும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை காங்கேசன்துறைமுகத்துக்கு வரவுள்ளது என்றும், அதை வரவேற்பதற்காக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு ஒன்று யாழ்ப்பாணம் வரவுள்ளது என்றும் அறியமுடிகின்றது.