சொகுசு பஸ்ஸில் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் சொகுசு பஸ்ஸில் கஞ்சா கடத்தப்படுகின்றது என வவுனியா பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது.
அதற்கமைய வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் இன்று காலை சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த பஸ்ஸை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது பஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒரு கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவை மீட்டனர்.
அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.