ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தலைவராக ஒருவரைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் அனைவரையும் இணைத்தலைவர்களாக நியமிக்க அந்தக் கட்சி நேற்று முடிவெடுத்துள்ளது.
அந்தக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. இதன்போது கட்சியின் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது.
ஜனநாயகத் தமிழ்க் தேசியக் கூட்டணியின் செயலராக புளொட்டைச் சேர்ந்த ஆர்.ராகவன், ஊடகப் பேச்சாளராக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தேசிய அமைப்பாளராக ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கட்சியின் பொருளாளராக ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இணைத்தலைவர்களாகச் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், க.சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, சி.வேந்தன் ஆகியோர் செயற்படுவர் என்று தீர்மானிக்கப்பட்டது.