0
ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் ஹபராதுவ ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பெதிபிட்ட – அங்குலுகஹா, பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.