0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி நாளை புதன்கிழமை அமைச்சரவை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்குப் பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு இதன்போது அனுமதி பெறப்படவுள்ளது.
இது தொடர்பான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றமும் எதிர்வரும் சனிக்கிழமை கூடவுள்ளது.