0
தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நாவலப்பிட்டி, மொன்றிகிறிஸ்ரோ தோட்டத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்த சிறு குழந்தைக்காகச் சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் குறித்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.