பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்த இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், புதுடில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளுக்காகப் பாராட்டுக்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஜெய்சங்கரை, இலங்கைக்கு வருகை தருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்ததோடு, இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.