நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகளால் டக்வர்த் லுவிஸ் முறையில் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரையும் 2–1 என கைப்பற்றியது.
காலியில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 31 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது.ஆரம்ப வீராங்கனையான அணித்தலைவி சாமரி அத்தபத்து 3ஆவது விக்கெட்டுக்காக நிலக்ஷி டி சில்வாவுடன் இணைந்து இலங்கை அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார்.
இருவரும் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 190 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 196 ஓட்டங்களை எட்டியது. என்பதும் குறிப்பிடத்தக்கது.