மூத்த சகோதரரை இளைய சகோதரர் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் பொலனறுவையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
25 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் படுகாயங்களுடன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொலையாளியான இளைய சகோதரரைக் கைது செய்துள்ள மானம்பிட்டிய பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இளைய சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.